Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

சூர்யாவின் அடுத்த படம் -Tamil Cinema News

 தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகுமாரின் மகன்   சூர்யா. தற்போது இவரின் 42வது படத்தை இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை திஷா பாட்னி நடித்து வருகிறார். இப்படம் 3d தொழில்நுட்பத்தில், மாபெரும் செலவில் உருவாகி வருகிறது.

இதையடுத்து இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற  இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற  படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரம்மாண்ட கூட்டணி

பான் இந்தியா படமாக கடந்த ஆண்டு உருவான சீதா ராம் திரைப்படம்   வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சீதா ராம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கும் அடுத்த படத்தில் மாஸ் ஹீரோவில் ஒருவரான  நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம்.


இப்படமும் பான் இந்தியா படமாக உருவாகப்போவதாக   கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான எந்த ஒரு  அறிவிப்பு வரவில்லை. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துஉள்ளது .

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்