தளபதி 68
தளபதி நடிக்கும் லியோ படத்திற்கு பின் தளபதி நடிக்க போகும் அவரது 68 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி என்றும் கூறப்பட்டது.
இதுவரை விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்லாக வெளியாகும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அ. வினோத் விஜய்க்கு கதை கூறி இருப்பதாகவும், அடுத்ததாக அ. வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். இந்த இருவரில் யாருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவர் தான் ஜோடி
ஆனால், தளபதி 68 படத்தை யார் இயக்கினாலும், நடிகை சமந்தா தான் கதாநாயகியாக நடிப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதற்க்கு முன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று திரைப்படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்
Please No Spam Comment's