Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

சந்திரமுகி 2 வில் கதாநாயகி இவர ?-Tamil Cinema News

சந்திரமுகி 2

 நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த சந்திரமுகி படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர்  பி.வாசு தற்போது இயக்கி வருகிறார். அதில் நடிகர்  ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இரண்டாம் பாகத்தின் கதை சந்திரமுகி முதல் பாகத்தின் இறுதி காட்சி  தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு புது கதையாக இருக்கும் என இயக்குனர் முன்பே கூறி இருக்கிறார்.

சந்திரமுகி இவரா?

சந்திரமுகியில் நடிகை ஜோதிகா தான் சந்திரமுகியாக சிறப்பாக நடித்து இருப்பார். அது போல இரண்டாம் பாகத்தில் யார் சந்திரமுகியாக நடிப்பது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அது பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகை லட்சுமி மேனன் இந்த படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்து வருகிறாராம், அவரது காட்சிகள் எல்லாம் பிளாஷ்பேக்கில் தான் வரும் என கூறப்படுகிறது.

அதனால் ஜோதிகாவுக்கு இணையாக தனக்கும் சந்திரமுகி ரோலில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என லட்சுமி மேனன் நம்பிக்கையாக இருக்கிறார் .

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்