ஜெயம் ரவி
ஜெயம் ரவி தனது இயக்குனர் அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ரீமேக் படங்களில் நடித்து பிரபலமானர் . பின்னர் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
பேராண்மை, கோமாளி, தனி ஒருவன், பொன்னியின் செல்வன் என கதைகளை தேர்வு செய்வதில் வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்து வருகிறார்.
கடந்த வருடம் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன்- 1 திரைப்படம் வெளியாகி இருந்தது, அதோடு இந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
பட பாக்ஸ் ஆபிஸ்
பெருங்கடலில் நடக்கும் அரசுக்கு எதிரான தவறான விஷயங்களை எடுத்து காட்டும் கதைக்களத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார் அகிலன் திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் 3 நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.

0 கருத்துகள்
Please No Spam Comment's