Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

நடிகர் கவினின் அடுத்த படம் -Tamil Cinema News

 நடிகர் கவின்

திறமை, உழைப்பு, நம்பிக்கையாக போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துகாட்டாக  நிறைய பேரை கூறலாம். அந்த வரிசையில்  இப்போது இணைந்திருப்பவர் தான் நடிகர் கவின்.

சின்ன வேடங்களில் படங்கள் நடித்து, தொடரில் நடித்து பின் பிக்பாஸில் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு மக்களின் இடையில் பிரபலமானவர்  கவின் தற்போது  டாடா படத்தின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுவிட்டார்.

அதிலும் தனுஷ், கார்த்தி என பல பிரபலங்கள் படம் குறித்து பெருமையாக பேசியிருப்பார்  அதனால்  கவினுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

அடுத்த படம்

டாடா படம்  மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்ட கவின் அடுத்து நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய கதையில் நடிக்க இருக்கிறாராம். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசை என ஏற்கெனவே தகவல் வந்தது.

தற்போது என்னவென்றால் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகை  பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.


Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்