பத்து தல
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வருகிற 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் பத்து தல. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்தி நடித்துள்ளார்.
மேலும் நடிகை பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.இசை புயல் ஏ.ஆர். ரஹமான் இசையமைத்துள்ள இப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பத்து தலபடத்தின் ட்ரைலர் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் வெளிவந்தது. செம மாஸாக இருந்த இப்படத்தின் ட்ரைலர் தான் தற்போது Youtube டிரேடிங்.
விஜய் பேசிய வீடியோ
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிம்புவை சர்ப்ரைஸ் செய்யும் வகையில் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவில் சிம்புவை பற்றி திரையுலக நட்சத்திரங்கள் பேசியதை தொகுப்பாக வந்தது.
இதில் நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சிம்பு குறித்து பேசியதை, பத்து தலை இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்ப திரையரங்கம் அதிர்ந்தது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


0 கருத்துகள்
Please No Spam Comment's