கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தளபதி விஜயை படமாக வரைந்து சாதனை படைத்துள்ளார்.
விஜய் ரசிகை
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம்பெண் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை ஆவார்.
அவர் மீதான அன்பின் காரணமாக தளபதியின் உருவப்படத்தை ஸ்டென்சில் முறையில் கருப்பு பேனாவைப் பயன்படுத்தி அப்படியே வரைந்துள்ளார்.
உலக சாதனை
அந்த பெண் ஒரு மணி நேரம் 56 நொடிகளில் 22க்கு 28 இன்ச் என்ற அளவில் அவர் வரைந்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். "Asian book of records" மற்றும்" International book of records" ஆகிய இரண்டிலும் தளபதியின் ரசிகையான அபர்ணா இடம்பிடித்துள்ளார்.
தற்போது சமூக வலைதளத்தில் அவரது சாதனை வைரலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



0 கருத்துகள்
Please No Spam Comment's