Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

லட்சமி மேனனின் அடுத்த படம் -Tamil Cinema News

 நடிகை லட்சுமி மேனன் முதலில்  2011ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடிக்க  தொடங்கினர். கடந்த சில வருடங்களாக தான்  படிப்பில் முழு கவனம் செலுத்தி கொண்டுயிருக்கிறார். அதனால் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்தார். தற்போது அவர் மீண்டும் சினிமாவில்  கம்பேக் கொடுக்க வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.

அவர் நடிப்பில் கடந்த வருடம்  புலிக்குத்தி பாண்டி என்று படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படம் தியேட்டரில் வெளியாகாமல்  நேரடியாக டிவியில் மட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோலிவுட்டில் நடிகை  லட்சுமி மேனன் பிஸியாக படங்கள் ஒப்புக்கொண்டு வருகிறார். ஏற்கனவே சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் அவர் தற்போது இன்னொரு படத்திலும் இணைந்து இருக்கிறார். 



சப்தம்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் "சப்தம்" என்ற படத்தில் தான் லட்சுமி மேனன் நடிக்க தொடங்கி இருக்கிறார். சந்திரமுகி 2 ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தில் லட்சுமி மேனன்க்கு ஜோடியாக நடிகர் ஆதி நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்த ஹாரர் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் மூணார் பகுதியில் நடந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.

நடிகர் ஆதி மற்றும் இயக்குனர்  அறிவழகன் இருவரும் இதற்கு முன் "ஈரம்" என்ற படத்தில் பணியாற்றிய நிலையில் தற்போது 13 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து இருக்கின்றனர். 


Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்