நயன்தாரா
தமிழ் சினிமா திரையுலகில் "லேடி சூப்பர்ஸ்டார்" என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா.
நயன்தாரா 2003ஆம் ஆண்டு மனசினகரோ என்ற தெலுங்கு பட மூலமாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் .2005ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .அதற்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் என்ற பெயரை பெற்றார் .
இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்யாகியுள்ளார்.
சினிமாவில் இருந்து விலகல்?
இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலக போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தனது இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.


0 கருத்துகள்
Please No Spam Comment's