Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

தனுஷ்யின் நிஜ பெயர் என்ன தெரியுமா ? -Tamil Cinema News

 


பொதுவாக நாம் தமிழ்  சினிமாவில் உள்ளபிரபலங்கள்  பலரின்  பெயர்கள்  நிஜ பெயர்கள்  கிடையாது. அதாவது இயக்குனர்கள் தங்களது படத்தில் உள்ள நடிகர் மற்றும் நடிகைகளுக்கு  சில பெயர் வைக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு அடையாளமாக மாற பிற்காலங்களில் இதுதான் அவர்களின் நிஜப் பெயர் என்ன   மாறிவிடுகிறது.

அந்த வகையில் பாரதிராஜா பெரும்பான்மையான நடிகர், நடிகைகளுக்கு பெயர் வைத்துள்ளார். அதுவும் அவர் நடிகைகளுக்கு "ரா" என்ற எழுத்தில் தான் அதிகம் பெயர் வைப்பார். இந்நிலையில் தனுஷுக்கும் சினிமா பிரபலம் ஒருவர் தான் இந்த பெயரை வைத்துள்ளார். இது பலரும் அறியாத உண்மையாகும் .

இயக்குனர் "கஸ்தூரி ராஜாவின்" இளைய மகனான தனுஷ் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த  "துள்ளுவதோ இளமை" என்ற படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதன் பின்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாரின்   மருமகன் என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் தனுஷின் உண்மை பெயர் என்னவென்றால் "வெங்கட் பிரபு". அப்போது கங்கை அமரனின் மூத்த மகன் இயக்குனர் "வெங்கட் பிரபுவும்" இதே பெயரில் இருந்து உள்ளார். மேலும் இயக்குனர் செல்வராகவன் தான் அதன் பின்பு தனது தம்பி வெங்கட் பிரபுவின் பெயரை "தனுஷ்" என்று  மாற்றினார்.

இதைத்தொடர்ந்து தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை என பல சூப்பர் ஹிட் படங்கள் வெள்ளிவந்தது . அதன் பின்பு தனுஷ், வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பல  பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தார்.

மேலும் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அவரது வளர்ச்சி கொடி கட்டி பறந்து வருகிறது. இதற்கெல்லாம் ஒரு வகையில் புள்ளையார் சுழி போட்டது செல்வராகவன் தான். தற்போது தனுஷ் என்ற பெயர் பட்டி தொட்டி எல்லாம் பரவிஇருக்கிறது . ஆனால் இப்போதும் தனுஷ் குடும்பத்தில் அவரை பிரபு என்று தான் அழைத்து வருகிறார்கள்.


Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்