ஜாக்சன் துரை சாப்டர் 2
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. சிபிராஜ் -சத்யராஜ் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள ஜாக்சன் துரை 2 படத்தில் சிபிக்கு ஜோடியாகியுள்ளார் சம்யுக்தா.இசையமைப்பள்ளர் சித்தார்த் விபினே இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
நாயகியாக இணையும் சம்யுக்தா
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் தரணிதரன் இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கவுள்ளார். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், இந்த முறை இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்கம், இசை என அனைவரும் முதல் பாகத்தில் பணிபுரிந்தவர்களே கமிட்டாகியுள்ள நிலையில், நாயகியாக வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்
Please No Spam Comment's