Nokia 105: சும்மா வெச்சு செய்யலாம்... 25 நாள்களுக்கு சார்ஜ் போட தேவையில்லை!
முதியோர்களுக்கு ஏற்ற போன் இது எனலாம். அவர்களால் அவ்வப்போது எழுந்து சென்று போனை சார்ஜ் செய்ய முடியாது. இந்த பிரச்னைகளை இந்த மொபைல் தீர்த்து வைக்கும். இதுமட்டுமில்லாமல் 2000 தொடர்புகள் வரை இந்த மொபைலில் பயனர்கள் சேமித்து வைக்க முடியும். எனவே, டைரியை தேடி அலையும் சங்கடமான சூழ்நிலையும் ஏற்படாது.
அந்த வகையில் 2019ஆம் ஆண்டு வெளியான நோக்கியா 105 மாடலில் புதிய வெர்ஷன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் நாள் முழுக்க அல்லது நாள் கணக்கில் பேசிக் கொண்டிருக்கும் அளவிற்கு பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் 25 நாள்கள் வரை சார்ஜ் பிரச்னை இல்லாமல் நண்பர்கள், உறவினர்களுடன் அளவளாவலாம்.
0 கருத்துகள்
Please No Spam Comment's