அட்லீ
இயக்குனர் அட்லீ" பிகில்" போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டவர் .இவர் தற்போது ஹிந்தியில் "ஜவான்" என்ற படத்தை ஷாருக்கான் நடிப்பில் இயக்கி வருகிறார். ஷாருக்கான் நடிக்கும் அந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் "நயன்தாரா", மக்கள் செல்வன் "விஜய் சேதுபதி" ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி அவருக்கு பிரசவத்தில் "ஆண்" குழந்தை பிறந்தது. அதை அவர்களே அறிவித்த நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
குழந்தையை பார்த்த ஷாருக்
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விய்ட்டர் பக்கத்தில் ரசிகர்கள் உடன் உரையாடினார். அப்போது அட்லீயின் குழந்தையை பார்த்தீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.அதற்கு ஆவர் "ஆம் பார்த்தேன். He is too sweet. ஆரோக்கியமாக இருக்கிறார்" என ஷாருக் பதில் தெரிவித்து இருக்கிறார்.

0 கருத்துகள்
Please No Spam Comment's