விடுதலை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன் முறையாக கதையின் நாயகனாக சூரி நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை.

இப்படத்தில் வாத்தியாராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய் சேதுபதி மகன் 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாநடித்துள்ளாராம். படப்பிடிப்பின் போது சூர்யா, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சூர்யா ஏற்கனவே தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால், சிந்துபாத் படத்தில் பார்த்த சூர்யாவை போல் இல்லாமல் விடுதலை படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


Ratings: