நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது . இதையடுத்து ரஜினியின் 170 படத்தை சூர்யா நடிப்பில் வெளிவந்த  ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 -ம் ஆண்டு திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா - ரஜினி

இந்நிலையில் ரஜினியின் 170 படத்தில் முக்கியமான காட்சியில் நடிகர் சூர்யாவை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் கடைசியில் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

Ratings: