லேடி சூப்பர்ஸ்டார் நடிகை  நயன்தாரா இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில்  ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஷாருக் ஜோடியாக அவர் நடிக்கும் அந்த படம் பாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அதே நேரத்தில் நயன்தாரா தனது 75வது படத்தை கடந்த மாதம் நடிக்க   தொடங்கினார். இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

நயன் ஜோடியாக ஜெய்

ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர்  ஜெய் தான் நடித்து இருப்பார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது மீண்டும் நயன்தாரா 75ல் ஜெய் அவர் ஜோடியாக நடிக்கிறார் .
இன்று ஜெய் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லி போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றனர். 

Ratings: