Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

தளபதியின் மகன் ஹீரோவா ?-Tamil Cinema News

 விஜய் மகன் சஞ்சய்

   தளபதி  விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் தான் சினிமா சார்ந்த படிப்பை முடித்தார். தற்போது ஒரு குறும் படத்தையும் இயக்கி வருகிறார்.

    இயக்கத்தில் முழுமூச்சாக இருக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில்  தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது.

   இயக்குனர்  சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிகர்  விஜய்யின் மகனை கேட்டுள்ளனர். விஜய் இந்த விஷயத்தை சஞ்சயிடம் கூறியுள்ளார்.


ஹீரோவாக அறிமுகம் 

     ஆனால்,அதற்கு  சஞ்சய் தளபதியிடம்  தனக்கு இயக்கத்தில் மட்டுமே தான்  கவனம் உள்ளது, நடிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இருந்தாலும் சஞ்சய்யை படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறதாம்.

இந்த கதையை சுதா கொங்கரா சஞ்சய்காகவே தேர்ந்தெடுத்து வைத்துள்ளாராம். ஏற்கனவே பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஆனால், அப்போதும் தனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை என சஞ்சய் கூறியதாக விஜய் தனது  பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்