சமீபத்தில், ஸ்மார்ட்போன் பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இதன் முதல் விற்பனை நிறுவனம் தொடங்கியுள்ளது.பிற நிறுவனங்களின் பிளாக்ஷிப் போன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் புதிய Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் பிளாக்ஷிப் சிப்செட், அமோலெட் டிஸ்ப்ளே, டிரிப்பிள் 50 மெகாபிக்சல் OIS கேமரா, 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என இந்த ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்களும் ரூ.52,999 என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.சியோமி 5ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.73" இன்ச் WQHD+ (1,440x3,200 pixels) E5 2K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 1500 nits வரை பீக் பிரைட்னஸ் போன்ற ஆதரவு உள்ளது. மேலும் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது.இதில், லேட்டஸ்ட் Android 12 அடிப்படையிலான MIUI 13 ஸ்கின், Qualcomm Snapdragon 8 Gen 1 SoC புராசஸர் நிறுவப்பட்டுள்ளது. வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், NFC ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் கொண்டுள்ளது. LPDDR5 ரேம் ஆதரவு, UFS 3.0 ஸ்டோரேஜ் மெமரியும் இதில் உள்ளது.
டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் 32MP மெகாபிக்சல் செல்பி கேமரா, பின்பக்கம் முதன்மை சென்சாராக Sony IMX707 கொண்ட 50MP மெகாபிக்சல் OIS கேமரா, 50MP மெகாபிக்சல் போட்ரெய்ட் சென்சார், 50MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் ஆகியவை கொண்ட மூன்று கேமரா சென்சார்கள் பிளாஷ் லைட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது.பிரீமியம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் 3216*1440 பிக்சல்கள், 120Hz ரெப்ரெஷ் ரேட், 525ppi திரை அடர்த்தி, HDR10+ ஆகியவை கொண்ட 6.7" இன்ச் முழு அளவு HD+ Fluid AMOLED LTPO 2.0 டிஸ்ப்ளே உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த டிஸ்ப்ளே வருகிறது. சியோமி 12 ப்ரோவில் உள்ளது போல மேம்பட்ட Gorilla Glass Victus பாதுகாப்பு இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்படவில்லை.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OxygenOS ஸ்கின், Snapdragon 8 Gen 1 சிப்செட், Adreno 730 கிராபிக்ஸ் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. சிப்செட் விஷயத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சரிக்கு சமமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப், அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, Flicker-detect, வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், USB 3.1 GEN1 Type-C, NFC ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் பெறுகிறது.
Thank For Visiting !!!!
0 கருத்துகள்
Please No Spam Comment's