இந்த வருடம் 2024 ஆண்டு தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பேசுகையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 28.10.2024 முதல் 30.10.2024 வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,176 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று கூறியுள்ளார்கள். அதேபோல் பிற ஊர்களிலிருந்து இந்த 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்கள்.
மேலும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், அவர் அவர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வருவதற்கு ஏற்ப பேருந்து 02.11.2024 முதல் 04.11.2024 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும் 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12,606 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார் போக்குவரத்து அமைச்சர்...
இந்நிலையில், சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் (28.10.2024 முதல் 30.10.2024 வரை) விவரம் பின்வருமாறு : கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன....
0 கருத்துகள்
Please No Spam Comment's