ஏப்ரல் 1 ஆம் தேதி இந்த டேப்லெட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்று இந்த புதிய சியோமி பேட் 5 டேப்லெட் வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் இருக்கும் டேப்லெட்டுகளை ஓரங்கட்டும் அளவிற்கு புதிய சியோமி டேப்லெட் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
அதிக டேப்லெட் வாடிக்கையாளர்களை கையில் வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நேரடி போட்டியாக தனது டேப்லெட்டை களமிறக்க்கி உள்ளது. Qualcomm Snapdragon 860 சிப்செட், 120Hz ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்ஸ் என பட்ஜெட் வகை டேப்லெட்டில் இல்லாத பல அம்சங்கள் இதில் உள்ளன. சியோமி பேட் 5 டேப்லெட் 11" இன்ச் WQHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே 1600x2560 பிக்சல் ரெசலியூஷன் வரை ஆதரவளிக்கும். DCI-P3, Dolby Vision ஆதரவையும் இந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும். 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவும், இதன் திரை அடர்த்தி 275ppi ஆகவும் இருக்கிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட் கொண்டு இந்த டேப்லெட் இயக்கப்படும். Android 12 அடிப்படையிலான MIUI 13 ஸ்கின் இதில் நிறுவப்பட்டிருக்கும். ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட் உடன் வெளியாகும் முதல் பட்ஜெட் டேப்லெட் இதுவாக இருக்கிறது.
கேமராவைப் பொருத்தவரை பின்பக்கம் 13MP மெகாபிக்சல் லென்ஸ் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8MP மெகாபிக்சல் லென்ஸ் இதன் டிஸ்ப்ளே பொசலில் பொருத்தப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ், கைரோகை சென்சார்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.1, WiFi, USB டைப் சி போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த டேப்லெட் கொண்டுள்ளது. மொத்தம் 4 ஸ்பீக்கர்கள் உடன் சிறந்த Dolby Atmos ஒலி ஆதரவையும் இந்த டேப்லெட் பெற்றுள்ளது.
0 கருத்துகள்
Please No Spam Comment's