Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

வலிமை’ படத்துடன் மோதும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன் - Short Cine Flix

Etharkkum Thuninthavan

தற்போழுது வலிமை’ படத்துடன் மோதும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 

தல அஜித்தின் திரைப்படம் ‘வலிமை’ இந்த படத்துடன் நமது சூர்யா நடித்திருக்கும் திரைப்படம்  ‘எதற்கும் துணிந்தவன்’ இந்த படம் தியேட்டர்களில் மிகவும் மோதுகிறது என்று தகவல்கள் தற்போழுது வெளியாகியுள்ளன....

எச்.வினோத் இயக்கத்தில்தல  அஜித் ‘வலிமை’ திரைபடத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், மற்றும் வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். இதில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் அனைவரும் தற்போது ரஷ்யா சென்று படப்பிடிப்பை முழுதாக முடித்தனர். அங்கு பைக் சாகச காட்சிகளும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டன...

இந்த நிலையில், ‘வலிமை’ படத்துடன் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு தளபதியின் ‘பீஸ்ட்’ தான் வெளியாகிறது என்று முன்பு அதிரடியாக தகவல்கள் வெளியாகின...

 தற்போதுவரை தளபதியின் ’பீஸ்ட்’ 100 சதவீத படப்பிடிப்பு  முடிவடைந்திருக்கிறது.  ’எதற்கும் துணிந்தவன்’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் கடந்த மாதம்  தொடங்கிவிட்டது. இதனால், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை பொங்கலுக்கு வெளியிடவும், ‘பீஸ்ட்’ படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடவும் நமது சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

இதையடுத்து  ‘வலிமை’ தற்போழுது  பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது என்று போனிகபூர் தெரிவித்துள்ளார். அனால் கொரோனா காரணமாக வலிமை படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு !!!!



 

Ratings:

கருத்துரையிடுக

0 கருத்துகள்