சீதா ராமம்

கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற    திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர்  துல்கர் சல்மான் நடிக்க  நடிகை மிருனாள் தாகூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை  ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். காதல் கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியை படக்குழுவிற்கு தேடித்தந்தது.

சீதா  ராமம் 2

இந்நிலையில், சீதா ராமம் 2 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ரசிகர் ஒருவர் நடிகை மிருனாள் தாகூரிடம் ' சீதா ராமம் இரண்டாம் பாக' வருமா என கேள்வி கேட்டுள்ளார்.

இதற்க்கு பதிலளித்த நடிகை மிருனாள் தாகூர் ' அதை பற்றி எனக்கு ஐடியா இல்லை. அப்படி சீதா ராமம் 2 உருவானால், கண்டிப்பாக அதிலும் நானே நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ' என கூறியுள்ளார். 

Ratings: