தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  லியோ திரைப்படம் உருவாகி வருவது நாம் அறிந்த ஒன்றே. இதில் திரிஷா கதாநாயகியாக  பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

இதையடுத்து லியோ படத்தின்  அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் மார்ச் 29 தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. இதன் பின்னர் சில காட்சிகள் ஹைதராபாதில் எடுக்கப்போவதாகவும் செய்தி  வெளியானது.

திடீர் மாற்றம்

இந்நிலையில் லியோ படத்தின் ஷூட்டிங்கில் சில மாற்றங்கள் நடந்துள்ளதாம் அது என்னவென்றால் இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி தான் தொடங்குகிறதாம்.
மேலும் சில காட்சிகள் ஹைதராபாத்தில் படமெடுக்கப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக சென்னையிலே மொத்த ஷூட்டிங் நடைபெறும் பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர்  கூறியுள்ளார்.  

Ratings: