கிஷோர் - ப்ரீத்தி குமார்
கடந்த 2009 ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் கிஷோர். அவர் சன் டிவியின் வானத்தை போல சீரியல் புகழ் பெற்று வந்த நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
நடிகர் கிஷோரை விட நடிகை ப்ரீத்தி குமாருக்கு 4 வயது அதிகம் என்பதால் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் தாங்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டனர்.
திருமணம்
தற்போது கிஷோர் மற்றும் ப்ரீத்தி குமார் திருமணம் நடந்து முடிந்தது. அதன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


0 கருத்துகள்
Please No Spam Comment's