வாரிசு

  தளபதி விஜய்யின் "வாரிசு" படம் கடந்த ஜனவரி  மாதம் 10ம் தேதி திரைக்கு வந்தது . அதற்கு  போட்டியாக  அஜித்தின் "துணிவு" படம் ரிலீஸ் ஆனது. அதனால் ஆரம்பத்தில்  இருந்தே இரண்டு படங்களுக்கும் தியேட்டர் பிரிவினை தொடர்பாக பிரச்சனை எற்பட்டது. மேலும் துணிவு படத்திற்கு அதிக காட்சிகளும் முதல் நாள் கிடைத்து இருந்தது.

அதன் பின் குடும்பத்துடன்  ரசிகர்கள் அதிகம் வர தொடங்கியதால் வாரிசு படம் அதிகமான தியேட்டர்களில் தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.



300 கோடி

   இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் வாரிசு படத்தின் மொத்த வசூலை அறிவித்து இருக்கிறது. தற்போது 300 கோடி ருபாய் வசூல் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை வாரிசு கடந்து இருக்கிறது.
இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். 




Ratings: