Header Ads Widget

Trending

6/recent/ticker-posts

வைரலாகும் அதர்வாவின் சிறுவயது புகைப்படம்! -Tamil Cinema News

aathrva


அதர்வா

             மறைந்த நடிகர் முரளி  தமிழ் சினிமாவில் தன் நடிப்பினால் பல வெற்றி படங்களை கொடுத்தார் .அதனால் தமிழ் சினிமாவில்  தனக்கென தனி இடத்தை பிடித்தார் .  இவரின் மகன் அதர்வாவும் தற்போது தமிழ் சினிமாவில்  பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுஇருக்கிறார்  . அதர்வா, 2010 -ம் ஆண்டு இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில்   வெளிவந்த  'பானா காத்தாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானர் .

இதன் பின்னர் இவர் "முப்பொழுதும் உன் கற்பனைகள் "போன்ற   சில திரைப்படங்களில் நடித்தாலும், இயக்குனர் பாலா இயக்கத்தில் 2013 -ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த ஆண்டு  இவர் நடிப்பில் சாம் ஆன்டன் இயக்கத்தில் வெளிவந்த    "ட்ரிக்கர்", ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த "குருதி ஆட்டம்",ஏ.சர்குணம் இயக்கத்தில்  வெளிவந்த   " பட்டத்து அரசன்"ஆகிய மூன்று படத்திற்கும் ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.


சிறுவயது புகைப்படம்

             சமீபகாலமாக பல சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாக வலம்  வருகிறது. இந்நிலையில் அதர்வா அவரின் அம்மா "சோபா" மற்றும்  அப்பா "முரளி"  உடன் சேர்ந்து சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  


 

Ratings:

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Please No Spam Comment's