இயக்குனர் மாரி செல்வராஜ் மற்ற இயக்குனர்கள் எடுக்க தயங்கிய கதைகளை தைரியமாக எடுத்து சூப்பர் ஹிட் படங்களாக ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.கதிர் நடிப்பில் வெளிவந்த " பரியேறும் பெருமாள்"மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த "கர்ணன்" படத்தை தொடர்ந்து தற்போது அமைச்சர் உதயநிதியின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார்.அதைதொடர்ந்து இப்போது "வாழை "என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த "மெட்ராஸ்" படத்தின் மூலம் பிரபலமான நடிகர் "கலையரசன்" இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஓன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருந்தார். அதாவது பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் சார்பாக" மகான்" படத்தில் நடித்த "துருவ் விக்ரமை' வைத்து ஒரு படம் எடுப்பதாகக் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
ஆனால் ஓரு சில காரணங்களினால் இந்த படம் எடுப்பது தடைபட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மாரி செல்வராஜ் பேசுகையில் பா ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் பண்ணுவதாக ஏற்கனவே ஒற்றுக்கொண்டேன். அப்போது தான் அமைச்சர் உதயநிதியின் கடைசி படமான" மாமன்னன்" பட வாய்ப்பு வந்ததால் இயக்குனர் பா. ரஞ்சித்" மாமன்னன்" படத்தை முதலில் எடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறினார்.
அதன் பின்பு "வாழை"என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு என்னக்கு கிடைத்தது. என் வாழ்நாளில் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் கனவு. இப்போது இந்த படம் முடிந்த பிறகு ரஞ்சித் தயாரிப்பில் படம் பண்ணுவதாக இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ஆகையால் துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி தற்போது உறுதிசெய்யபட்டுள்ளது .
துருவ் விக்ரம் நடித்து வந்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த நிலையில் அவரது கேரியர் வீணாக போய் விடக்கூடாது என்ற காரணத்தினால் மாரி செல்வராஜ் இடம் நடிகர் விக்ரம் ஒப்படைத்துள்ளார். ஏனென்றால் மாரி செல்வராஜ் தன்னுடைய படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஹீரோவை செதுக்கி விடுவார்.
எனவே இந்த படத்திற்காக துருவ் விக்ரம் ஆயத்தமாகி வருகிறாராம். மாரி செல்வராஜ் அதற்கான கதையை ஏற்கனவே தயார் செய்து விட்டாராம். மேலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் துருவ் விக்ரமை ரசிகர்கள் கொண்டாடுவர்கள் என்ற நம்பிக்கையில் விக்ரம் உள்ளார்.

0 கருத்துகள்
Please No Spam Comment's